பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த முதல் நாளே ஜிபி முத்துவை பாத்திரம் கழுவ விட்ட போட்டியாளர்கள் !! பாத்திரம் கழுவது ஏன் என்று தெரியுமா ?? இதோ ..!!
இணையத்தில் மிகவும் பிரபலமான ஒரு நபராக இருந்து வரும் ஜிபி முத்து தற்போது விஜய் டிவியின் பிக் பாஸ் 6ம் சீசனுக்கு போட்டியாளராக வந்திருக்கிறார்.பிக் பாஸ் ஜிபி முத்து தான் தற்போது பிக் பாஸ் ரசிகர்கள் எல்லோரையும் entertain செய்து வருகிறார். முதல் நால் அவர் செய்த அட்ராசிட்டியை எல்லாம் பாருங்க.
விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக தொடங்கியது. போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வரவழைக்கப்பட்டு, அவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பும் வழக்கமான நடைமுறையை நிறைவேற்றினார்வழக்கமாக போட்டி தொடங்கினால், முதல் வாரம் கொஞ்சம் ரிலாக்ஸேசன் இருக்கும்.
ஆனால், இந்த முறை போட்டி தொடங்கியதுமே கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. போட்டியாளர்களை தனி தனி குழுவாக பிரிக்கப்பட வேண்டும் என்றும், மொத்தம் சமையல், பாத்திரம் கழுவுதல், வீட்டின் உள்ளே சுத்தம் செய்தல், குளியல் மற்றும் கழிவறையை சுத்தம் செய்தல் என நான்கு குழுக்கள் இருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.