பிக்பாஸ் நிகழ்ச்சியின் குரலுக்கு சொந்தக்காரர் இந்த பிரபலமா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!
பிரபல டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உண்மையாக குரல் கொடுப்பவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.பிக் பாஸ் சீசன் 6 தற்போது வெகுசிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் அமுதவாணன், ஜி.பி. முத்து, ஷாந்தி,
ஜனனி, ஆயீஷா, ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.
நிகழ்ச்சி துவங்கி மூன்றாவது நாளான இன்று சில சலசலப்பும், முத்து, அமுதவாணன் போன்ற போட்டியாளர்களால் நகைச்சுவையும் நிகழ்ந்து வருகிறது.பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடையாளமாக இருப்பதே
பிக் பாஸின் கம்பிரமான குரல் தான். ஆனால், அந்த குரலின் சொந்தக்காரர் யார் என்பது குறித்து இதுவரை நாம் பார்த்தது கிடையாது.இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுக்கும் நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவருடைய பெயர் சச்சிதானந்தம். இவர் தமிழ் மட்டுமின்றி பாலிவுட் வரை வேலை செய்துள்ளாராம்.
இதோ சமூக இணையதளத்தில் வெளியான புகைப்படம் ..