காமெடி நடிகர் வடிவேல் தமிழ்த் திரைப்பட நடிகரும், பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் மதுரையை சேர்ந்தவர். 1988 இல் டி. ராஜேந்தர் இயக்கிய என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.
தொழில் ரீதியாக வடிவேலு என்று அழைக்கப்படும் குமாரவடிவேல் நடராஜன் ஒரு இந்திய நடிகர், நகைச்சுவை நடிகர் மற்றும் பின்னணிப் பாடகர் ஆவார். சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான இவர் தமிழ் சினிமாவில் துணை மற்றும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். 2000களில் கோலிவுட்டில் பரவலான பாராட்டைப் பெற்றார்.
இவருக்கு சரோஜினி என்ற மனைவியும் கன்னிகாபரமேஸ்வரி, கார்த்திகா, கலைவாணி ஆகிய மகள்களும், சுப்ரமணியன் என்ற ஒரு மகனும் உள்ளனர். திரைப்படங்களில் நடித்த பின்னர் பணம், புகழுடன் வசதியாக வாழ்ந்தாலும், தனது கடந்த காலத்தில்
ஏழ்மையோடு போராடியதை மறக்காத வடிவேலு தனது மகன் சுப்ரமணியனுக்கு, சிவகங்கை அருகே உள்ள திருப்புவனத்தில் ஒரு கூரை வீட்டில் வசிக்கும் ஏழ்மையான குடும்பத்தில் புவனேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார்.
நடிகர் வடிவேலுவுக்கு சுப்பிரமணி, கார்த்திகா என இரு பிள்ளைகள் உள்ளனர்.இதில் வடிவேலுவின் ஒரே மகள் தான் கார்த்திகா. இவருடைய திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்..