சப் – கலெக்டராக பொறுப் பேற்ற பிரபல முன்னணி நடிகரின் மகன் !! அட இவரது மகனா இவர் .. புகைப்படத்தை பார்த்து வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள் ..!!
பிரபல முன்னணி நடிகர் சின்னி ஜெயந்த் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர், நடிகர் மற்றும் மிமிக்ரி கலைஞர் ஆவார், இவர் தமிழ் திரைப்படங்களில் பல முக்கிய, பாத்திரம் மற்றும் துணை வேடங்களில் தோன்றியுள்ளார்.. இவர் 1984ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த கை கொடுக்கும் கை என்ற
படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இவர் 300க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 30 வருடங்களுக்கு மேல் இவர் திரைத்துறையில் நடித்து வருகின்றார்.இவர் தனது தனித்துவமான நகைச்சுவை பாணியால் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்,
அதோடு சகளை வெர்சஸ் ரகளை,கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார். தற்போது இவர் தன்னுடைய வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.மேலும் நடிகர் சின்ன ஜெயந்துக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சப் கலெக்டராக பயிற்சி பெற்று வந்த நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் தற்போது திருப்பூருக்கு சப் கலெக்டராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து பேசிய அவர் , திருப்பூர் மக்களின் நலம் சார்ந்து என்னுடைய முழு உழைப்பும் இருக்கும்.
என் பெற்றோர்கள் சினிமாத்துறையை சேர்ந்தவராக இருந்தாலும் என்னை சிறு வயதிலிருந்து கல்வி தான் முக்கியம் என்று ,கூறி வளர்த்துவந்தனர் . அவர்களுக்கு என்னுடைய நன்றியி னை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார் . சப் கலெக்டராக பொறுப்பேற்றுள்ள நடிகர் சின்னி ஜெயந்தியின் மகனுக்கு ரசிகர்கள் தங்களி ன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் .