என்னாது 2வது மனைவியையும் பிரிந்து வாழும் வீரம் பட நடிகர் .. வெளியான செய்தியை கேட்டு அ தி ர்ந்து போன ரசிகர்கள் ..!!!
வீரம் படத்தில் அஜீத் தம்பியாக நடிக்கும் பாலா இயக்குனர் சிவாவின் தம்பி ஆவார்.சிறுத்தை சிவா இயக்கியுள்ள வீரம் படத்தில் அஜீத் குமாருக்கு தம்பியாக விதார்த், சுஹைல், முனிஷ் மற்றும் பாலா ஆகியோர் நடித்துள்ளனர். தம்பி கதாபாத்திரங்களுக்கு நடிகர்களை தேடுகையில் அஜீத் பாலாவின் புகைப்படத்தை பார்த்துவிட்டு இவரையே எடுக்கலாம் என்று சிவாவிடம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சிறுத்தை சிவா. இவருடைய தம்பியும் பிரபல நடிகருமானவர் பாலா.இவர் கடந்த 2010ஆம் ஆண்டு பின்னணி பாடகி, அம்ருதா சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு.இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று கடந்த
2016ஆம் ஆண்டு பிரிந்துவிட்டனர்.இதன்பின் கடந்த 2021ஆம் ஆண்டு எலிசபத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர் மருத்துவர் ஆவர்.இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடமே ஆகும் நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து பாலா வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதன்பின் அதனை டெலிட் செய்துவிட்டார்.