நடிகை சீதாவின் மகளா இவங்க .. அழகில் அம்மாவை மிஞ்சிடுவாங்க போலயே !! இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!
நடிகை சீதா ஒரு இந்திய திரைப்பட நடிகை இவர் தொலைக்காட்சி நடிகை மற்றும் தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமா மற்றும் ஒரு சில கன்னட படங்களில் முக்கியமாக தனது படைப்புகளுக்கு பெயர் பெற்ற தயாரிப்பாளர் ஆவார். தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் 1985 முதல் 1991 வரை முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக இருந்தார்.
அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு மாரன் திரைப்படத்துடன் திரைப்படத் துறையில் மீண்டும் வந்தார். ஒட்டு மொத்த உலகமே அமைதியான சூழலில் இருப்பதாக நடிகை சீதா தெரிவித்துள்ளார். தற்போது கொரோன என்னும் பெருந்தொற்று நோய் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
இந்நோயால் உலகில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க இந்தியாவில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மாவுடன் தனிமையில் வாழ்ந்து வரும் நடிகை சீதா இது குறித்து பேசியுள்ளார். உலகம் முழுவதுமே ஒரு அசாதாரணமான சூழல் நிலவுகிறது.இன்பம் துன்பம் இரண்டுமே நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பது மிகவும் முக்கியம்.
இது கஷ்டமாகத் தான் இருக்கிறது. ஆனாலும் இதை நாம் கடந்து தான் செல்ல வேண்டும். பரபரப்பாக அலைந்து திரிந்து கொண்டிருந்தநாம் இப்போது வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது கொஞ்சம் சிரமமான விஷயம் தான். ஒட்டு மொத்த உலகமே அமைதியான சூழலில் இருக்கிறது. வீட்டை சுத்தம் செய்யும் போதெல்லாம் மனசுக்குள் ஒரு மகிழ்ச்சியும், நிம்மதியும் இருக்கும். எங்கள் வீட்டு மாடியில் காய்கறிகள் தோட்டம் உள்ளது.
சாயங்காலம் ஐந்து மணிக்கு மாடித்தோட்டத்துக்கு போய் பழைய பாடல்களைக் கேட்டுக்கிட்டே ஒவ்வொரு செடிக்கும் தண்ணீர் ஊற்றுவேன். ஷூட்டிங் இல்லாத நாள்களில் இப்படித் தான் வீட்டில் பொழுது போகும்.அதனாலேயோ என்னவோ எனக்கு இந்த லாக்டவுண் நாள்களில் பெரிய வித்தியாசம் தெரியவில்லை என்று நடிகை சீதா தன்னுடைய இயல்பு வாழ்க்கை குறித்து கூறியுள்ளார். தற்போது நடிகை சீதா தனது மகள் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.