சித்து – ஸ்ரேயா தல தீபாவளி முடித்த கையோடு வெளியிட்ட குட் நியூஸ் .. இதோ என்னவென்று நீங்களே பாருங்க ..!!
சின்னத்திரை ஜோடிகளில் அதிக ரசிகர்களை கொண்ட ஜோடி என்றால் அது சித்து – ஸ்ரேயா அஞ்சன் ஜோடி தான். சீரியல மட்டும் அல்ல நிஜத்திலுமே இருவருக்குமிடையேயான புரிதலும், காதலும் கவித்துவமானது அதற்காகவே இவர்களை அதிக நபர்கள் சோஷியல் மீடியாக்களில் பின் தொடர்ந்து வருகிறார்கள்.
ஸ்ரேயா அஞ்சன் ஏற்கெனவே அன்புடன் குஷி, அரண்மனை, நந்தினி உள்ளிட்ட சீரியல்களில் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார்.திருமணத்துக்கு பிறகும் கணவனும், மனைவியும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்கள்.சித்து – ஸ்ரேயா தம்பதியினர் தங்கள் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை ரசிகர்களுடன் சோஷியல் மீடியா மற்றும்
யூ-டியூப் சேனல் வழியே பகிர்ந்து வருகின்றனர்.சமீபத்தில் கூட MG காரின் டாப் மாடலை சித்து சுமார் 23 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருந்தார். அதுமட்டுமில்லை சித்து பிறந்த நாளை மாலத்தீவில் கொண்டாட வைத்தார் ஸ்ரேயா.சமீபத்தில் இந்த ஜோடி தல தீபாவளி கொண்டாடி இருந்தனர். அந்த புகைப்படங்கள் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி இருந்தன.
இவர்கள் இருவருக்கும் சிறந்த நடிகர், நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. fab stars iconic award 2022 சார்பில் இந்த விருது இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. விருதுடன் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளனர். அந்த புகைப்படம் சமூக இணையத்தில் வெளியானதை நீங்களே பாருங்க .