அட நம்ம ஹன்சிகாவின் வருங்கால கணவர் இந்த பிரபலமா ?? திருமணம் எப்பொழுது என்று தெரியுமா ?? இதோ ..!!
பிரபல முன்னணி நடிகையான ஹன்சிகா மோத்வானி ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தோன்றுகிறார். ஹன்சிகா இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் தேசமுதுரு, காந்த்ரி மற்றும் மஸ்கா உள்ளிட்ட தெலுங்கு படங்களில் முக்கிய வேடங்களில் தோன்றினார்.
நடிகை ஹன்சிகா விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார், அதற்கான ஏற்பாடுகள் ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற்று வருகிறது என கடந்த சில வாரங்களுக்கு முன்பே செய்தி வெளியானது. அது பற்றி ஹன்சிகா எந்த வித விளக்கத்தையும் அளிக்கவில்லை, அந்த செய்தியை மறுக்கவும் இல்லை.
இந்நிலையில் தற்போது டிசம்பர் 4ம் தேதி அவரது திருமணம் நடைபெறுவது உறுதியாகி இருக்கிறது. அவரது வருங்கால கணவர் பற்றிய விவரமும் வெளிவந்து இருக்கிறது.ஹன்சிகா அவரது நீண்ட நாள் நண்பரும், பிஸ்னஸ் பார்ட்னருமான Sohail Kathuria என்பவரை தான் திருமணம் செய்ய இருக்கிறார்.
அவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த சில வருடங்களாக ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.வரும் டிசம்பர் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை திருமண விழா நடைபெற இருக்கிறது. இது பற்றிய அறிவிப்பை ஹன்சிகா விரைவில முறையாக வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.