பிரபல நடிகையை சித்தார்த் காதலிக்கிறாரா ?? இதோ சித்தார்த் தனது நெஞ்சில் சாய்ந்தபடி இருக்கும் காதலியின் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!
பிரபல நடிகர் சித்தார்த் சூர்யநாராயணன் முதன்மையாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழி படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகர் ஆவார். நடிப்பு மட்டுமின்றி, திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர் என திரைப்படங்களிலும் ஈடுபட்டுள்ளார். பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
சித்தார்த் இதற்கு முன்பு பல நடிகைகள் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கி இருக்கிறார். அவர் தற்போது காற்று வெளியிடை பட நடிகை அதிதி ராவ் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.அதை கிட்டத்தட்ட உறுதி செய்யும் விதமாக அவர் தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோ வைரல் ஆகி இருக்கிறது.
சித்தார்த் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அதிதி ராவுக்கு இன்று 36வது பிறந்தநாளை என்பதால் அவருக்கு வாழ்த்து சொன்ன சித்தார்த் “Princess of Heart” என குறிப்பிட்டு இருக்கிறார். அதோடு தனது நெஞ்சில் அதிதிராவ் சாய்ந்தபடி இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இருவரும் மகா சமுத்திரம் என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்தனர். இதோ சமூக இணையத்தில் வெளியான புகைப்படம் .