ஹிப்ஹாப் தமிழா என்பது ஒரு தமிழ்நாட்டு தமிழ் சொல்லிசை இசைக்குழு ஆகும். இதில் ஆதியும் ஜீவாவும் முக்கிய கலைஞர்கள் ஆவார்கள். 2015இல் இருந்து இவர் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார். இவர் பல ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவர் ஆம்பள திரைப்படத்தின் வழியாக திரைக்கு அறிமுகமானார். இவர்கள் இந்தியாவில் தமிழ் சொல்லிசையின் முன்னோடி இசைக்குழுக்களில் ஒன்றாக கருதப்படுகிறார்கள்.
ஹிப்ஹாப் கலைஞராக ‘வணக்கம் சென்னை’ படத்தில் ‘சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்’ பாட்டு மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார் ஆதி. ‘ஆம்பள’ திரைப்படத்தில் இசையமைப்பாளராக சுந்தர். சி முதன்முதலில் வாய்ப்பு வழங்கினார்
அதைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்தனர். மீசைய முறுக்கு திரைப்படத்தின் வழியாக இயக்குநராகவும், கதா நாயகனாகவும் ஆதி அறிமுகமானார்.
ஹிப்ஹாப் ஆதிக்கு திருமணம் நடந்துவிட்டது. ஆனால், இது பல பேருக்கு தெரியாது. இவர்களுடைய திருமணம் திருப்பதி கோயிலில் உறவினர்கள் மத்தியில் இரண்டு நாட்களில் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. ஹிப்ஹாப் ஆதியின் மனைவி பெயர் லட்சயா.
தற்போது ஆதி தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் வாழ்த்துகளைத் சொல்லியும், இவ்வளவு அழகான மனைவியா என்று கமண்ட் போட்டும், லைக்ஸ் செய்தும் ஷேர் செய்தும் வருகிறார்கள்.