அம்மாவினை மிஞ்சும் அழகில் வளர்ந்துவிட்ட மகள் நைனிகா! பார்க்க ஹீரோயின் போல அழகில் ஜொலிக்கிறாரே !! இதோ நீங்களே பாருங்க ..!!!
நடிகை மீனா தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் அறியப்பெற்ற நடிகை ஆனார். இவரது முதல் திரைப்படம் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படமாகும். 90களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகையாக இடம்பெற்றுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக நடித்து வெளியான முத்து திரைப்படம், சப்பானில் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து சப்பான் நாட்டு ரசிகர்களையும் பெற்றுள்ளார். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
மீனா பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகர் என்பவரை 2009 சூலை 12 அன்று ஆர்ய வைஸ்ய சமாஜ் மண்டபத்தில் திருமணம் செய்தார். பின்னர் இருவரும் ஆந்திரப் பிரதேசத்தின் திருமலை வெங்கடாசலபதி கோயிலுக்குச் சென்றனர்.மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்று காரணமாக 2022 சூன் 28 அன்று காலமானார்.அம்மா போலவே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நைனிகா, அதன் பின்னர் அரவிந்த் சாமி, அமலா பால் நடித்த
பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலும் நடித்தார். க்யூட் குட்டி பெண்ணாக “தெறி” படத்தில் பொறி பறக்கவிட்ட நைனிகா தற்போது நெடு நெடுவேன வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். தன்னுடைய அம்மா மீனாவுடன் நைனிகா எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.
குட்டி பாப்பா நைனிகாவா இது? என ரசிகர்கள் ஆச்சர்யப்படும் வகையில் படுவேகமாக வளர்ந்து விட்டார் தெறி பேபி என ஆச்சர்யத்துடன் கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.