பிரபல முன்னணி நடிகர் பிரபுதேவா இந்தியத் திரைப்பட நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரன் வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று பிரபலமாக அறியப் படுகின்றார். இவரது முதலாவது நடனம் வெற்றிவிழாத் திரைப்படத்திற்கானதாகும்.
இவர் இன்றுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனமாடியுள்ளார். மின்சார கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய பிரபுதேவா சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ளார்.
பிரபு தேவாவிற்கு 1995ம் ஆண்டு ராம்லாத் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது, இவர்களுக்கு 3 மகன்கள் பிறந்தார்கள், அதில் ஒருவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டார்.2020ம் ஆண்டு பிரபுதேவா ஹிமானி சிங் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார், ஆனால் இதுவரை அவரது புகைப்படம் கூட வெளியானது இல்லை.
இந்த நிலையில் நடிகை ரம்பா தனது டுவிட்டரில் பிரபுதேவா வைத்த இரவு உணவு விருந்தில் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நாம் பார்த்து பழகிய நாயகிகள் உள்ளார்கள், ஒருவரை நாம் பார்த்தது இல்லை.எனவே அவர் தான் பிரபுதேவா இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட பெண் என ரசிகர்கள் கமெண்ட் செய்கிறார்கள்.
View this post on Instagram