ம ருத்து வம னையில் சி கிச்சை பெற்று வரும் சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து க தறும் ரசிகர்கள் ..!!

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு யசோதா, சகுந்தலம், குஷி உள்ளிட்ட படங்களை முடித்துவிட்டு அமெரிக்காவில் பயணத்தை மேற்கொண்டார்.சமுகவலைத்தளத்தில் இருந்து ஒதுங்கி வரும் காரணம் என்ன

என்ற கேள்வி சமந்தாவிடம் எழுந்த நிலையில் தனக்கு மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளார். அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வருவதாக அவர் எடுத்த புகைப்படம் மூலம் தெரிவித்து ஷாக் கொடுத்தார்.இதற்கு பல பிரபலங்கள் அவருக்கு ஆறுதலாக கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

அதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் அவர் யசோதா படத்திற்காக டப்பிங் பேசி இருந்தார்.அவரது கடமை உணர்வை பலரும் பாராட்டினார்கள். மேலும் சமந்தா விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பிராத்தித்து வருகிறார்கள்.இந்நிலையில் தற்போது சமந்தா இன்று யசோதா படத்தின்

ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார். அதற்காக அவர் தயாராக இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.அந்த புகைப்படங்களில் சமந்தா வாடிய முகத்துடன் இருப்பதை பார்த்து ரசிகர்கள் கலங்கி இருக்கிறார்கள். சமந்தாவின் புகைப்படங்கள் இதோ.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *