அட IVF சிகிச்சை மூலம் குழந்தை பெற்று கொண்ட நடிகை ரேவதியின் மகளா இவங்க !! அழகில் அம்மாவை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ ..!!
பிரபல முன்னணி நடிகை ஆஷா கெலுன்னி நாயர், அவரது மேடைப் பெயரான ரேவதியால் நன்கு அறியப்பட்டவர், ஒரு இந்திய நடிகை மற்றும் இயக்குனர் ஆவார், இவர் தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடத் திரைப்படங்களுக்கு மேலதிகமாக தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் அவரது படைப்புகளுக்காக அறியப்பட்டவர்.
மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்தி, ஆங்கிலத்தில் திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.1988 ல் சுரேஷ் மேனனைத் திருமணம் செய்தார். பின்னர், 2002 ல் இருவரும் மணமுறிவு பெற்று பிரிந்தனர். மாடர்ன், குடும்ப பாங்கான லுக் என எதுவானாலும் அதில் அப்படியே அம்சமாக இருப்பார்.
மண்வாசனை படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் கன்னி ராசி, ஆண்பாவம், மௌன ராகம், அரங்கேற்ற வேளை, ஒரு கைதியின் டைரி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இப்போது படங்களை நடிப்பதை தாண்டி படங்கள் இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
இயக்குனர் சுரேஷ் மேனனை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர் பின் சில காரணங்களால் விவாகரத்து பெற்று தனியே வாழ்ந்து வருகிறார். இதற்கு இடையில் நடிகை ரேவதி சோதனைக் குழாய் மூலம் கர்ப்பமாகி ஒரு பெண் குழந்தையை பெற்றார், அவருக்கு மஹி என்றும் பெயர் வைத்துள்ளார்.
அவர் தான் தனது உலகும், ஒரு அம்மாவாக அவளை நன்றாக கவனித்து வருகிறேன் என ஒரு பேட்டியில் கூட கூறியுள்ளார்.