அட நடிகை தேவயானியின் இரண்டு மகள்களா இவங்க !! அழகில் அம்மாவை போலவே இருக்காங்களே .. இதோ ..!!

தமிழ்த்திரையுலகில் அழகான சிரிப்புக்கும், ஆபாசமே இல்லாத நடிப்புக்கும் சொந்தக்காரி தேவயானி. விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்தவர் தேவயானி. ஆர்ப்பாட்டமே இல்லாத மிக எளிமையான நபராக இப்போது உலா வந்து கொண்டிருக்கிறார்.திரையுலகில் உச்சத்தில் இருந்த போதே இயக்குனர் ராஜகுமாரன் மீது காதல் வயப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி

திருமணம் செய்தவர். தற்போது கணவர், மகள்கள் இனியா, பிரியங்காவோடு மகிழ்ச்சியான வாழ்வு வாழ்ந்து வருகிறார். தேவயானிக்கு அந்தியூர் தாலுகா, சின்னமங்கலம் கிராமத்தில் தோட்டத்தோடு கூடிய வீடு ஒன்றும் உள்ளது. பகுதிவாசிகளால் அந்த ஏரியா தேவயானி தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது.

அம்மாவின் கைப்பக்குவத்தில் சாப்பிடுவது தேவயானிக்கு கொள்ளைப் பிரியம். சைவம் என்றால் ரசமும், அசைவம் என்றால் மீன் குழம்பும், பிரியாணியும் பேவரைட் என்கிறார். வெளிநாட்டு பயணம் என்றால் சுவிட்சர்லாந்து தேவையானியின் இஷ்ட பிரதேசம். தன் பாட்டி மீது தேவயானிக்கு கொள்ளைப் பிரியமாம். பாட்டிதான் தனது ரோல்மாடல் என அடிக்கடி சொல்கிறார் தேவயானி.

அட்ரா அட்ரா நாக்குமுக்கா புகழ் நகுல் தேவயானியின் தம்பி என்பது அனைவருக்கும் தெரியும் . அண்மையில் தேவயானி, அவரது கணவர் ராஜ்குமார், மகள்கள் இனியா, பிரியங்கா ஆகியோர் ஒரு விழாவில் சேர்ந்து கலந்து கொண்டனர். அப்போது எடுத்த புகைப்படம் ஒன்று இப்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் அடடே தேவயானியின் மகள்களா இது? அச்சு, அசப்பில் அப்படியே இருக்கிறாரே? என கமெண்ட் செய்துவருகின்றனர்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *