17 வயது குறைந்த இளம் நடிகையுடன் தொடர்பு .. 3-வது கல்யாணத்திற்கு தயாராகி எஸ்கேப்பாகும் 57 வயது பிரபல நடிகர் .. அந்த நடிகர் இவரா என்று அதிர்ச்சியான ரசிகர்கள் ..!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தான் அந்த 57 வயதான நடிகர். சமீபத்தில் நடிப்பில் இருந்து விலகவுள்ளதாகவும் தன் குழந்தைகளுடன் இனிமேல் நேரத்தை செலவிடவும் முடிந்தவரை நல்ல திரைப்படங்களை தயாரித்தும் வருவதாக அறிவித்துள்ளார். இப்படியொரு முடிவெடுக்க அவர்
காரணங்கள் சொன்னாலும் உண்மையில் அதற்கு காரணமெ வேறாம். அதாவது அவர் சமீபத்தில் நடித்து வெளியான படம் படுதோல்வியை அடைந்து பல கோடி நஷ்டத்தை கொடுத்தது.பான் இந்தியா படமாக பிரமோஷன் நடைபெற்று படுதோல்வியை கொடுத்ததால் இப்படியொரு முடிவெடுத்திருப்பதாக பாலிவுட் ஊடகம் கூறி வருகிறது.
ஆனால், இதுவரை நடிகர் இரு திருமணங்கள் செய்து விவாகரத்து பெற்ற நிலையில் இளம் நடிகையுடன் காதலில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.இதனை தொடர்ந்து படுதோல்வியை கொடுத்த படத்தில் நடித்த 40 வயதான நடிகையுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாம். இருவரும் கூடிய சீக்கிரமே இணைந்துவிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.