மும்பையின் இளம் தொழிலதிபர் ஒருவரை தமன்னா திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நடிகை ஹன்சிகா சமீபத்தில் மும்பை தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து, அந்த வரிசையில் தமன்னாவின் திருமண தகவலும் வெளிவந்துள்ளது.
தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமான தமன்னா, கல்லூரி என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் அங்கீகாரம் பெற்றார்.பிறகு தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்கள் விஜய், அஜித், சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோருடன் ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை தமன்னா.
இந்நிலையில் 32 வயதாகும் தமன்னா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.அவர் மும்பையின் இளம் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும், அவரை நீண்ட நாட்களாக தமன்னாவிற்கு தெரியும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
தனது திருமணம் குறித்து வெளியாகி வரும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமன்னா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் வேடமிட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் தனது தொழிலதிபர் கணவனை அறிமுகப்படுத்துவதாக குறிப்பிட்டு, “திருமணம், வதந்தி,” அனைவரும் எனது வாழ்க்கை
அட முதல் முறையாக வருங்கால கணவரின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட தமன்னா !! அட இந்த பிரபலமா என்று அதிர்ச்சியான ரசிகர்கள் ..!!
குறித்து எழுதுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.இதற்கு முன்பு பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, திருமணத்தை விட வாழ்க்கையில் நிறைய இருக்கிறது என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.