பாகுபலி நடிகர் பிரபாஸை திருமணம் செய்துகொள்ள பிரபல நடிகை .. அட அந்த நடிகை இவங்களா என்று அ தி ர்ச்சி யான ரசிகர்கள் ..!!
பிரபல நடிகர் பிரபாஸ் இராஜூ என்பவர் தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். இவர் தெலுங்கு திரைப்படத் துறையின் முன்னணி நடிகர்களுள் ஒருவர். வர்ஷம் என்ற 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் மூலம் இவர் புகழடைந்தார். மிர்ச்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர். பெர்ஃபெக்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது வெற்றிப் படங்கள்.
தெலுங்கு திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி, அதன்பின் பாகுபலி படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ்.முதல் பாகத்தை தொடர்ந்து வெளிவந்த பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் உலகளவில் பிரபாஸுக்கு மார்க்கெட்டை ஓபன் செய்தது.பாகுபலி படத்திற்கு பின் இவர் நடித்து வெளிவந்த படங்கள் எதிர்பார்த்த
அளவிற்கு ஓடவில்லை. மேலும் தற்போது ஆதிபுருஷ், சாலர் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.இதில் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளிவந்து பல விமர்சனங்களில் சிக்கியது. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் நடிக்கிறார்.
இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பிரபாஸை திருமணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தால், கண்டிப்பாக அவரை திருமணம் செய்துகொள்வேன் என்று கூறியுள்ளார் நடிகை கிருத்தி சனோன். இவருடைய இந்த பேச்சு தற்போது ஊடகங்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.