மறைந்த நடிகர் ரகுவரனின் மகனும் ஒரு பிரபலமா ?? அட இது தெரியாமல் போச்சே !! இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!! நடிகர் ரகுவரன் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மொழிகளில் எதிர்நாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்த திரைப்பட நடிகராவார்.தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்களை மக்களால் மறக்கவே முடியாது.
பாடகி சொர்ணலதா, எஸ்.பிபி, சில்க் ஸ்மிதா என இப்படி கூறிக்கொண்டே போகலாம். இவர்களின் லிஸ்டில் இருப்பவர் தான் நடிகர் ரகுவரன்.எத்தனை வில்லன்கள் வந்தாலும் இவரை மட்டும் மக்களால் மறக்க முடியாது, இப்போதும் இவர் இருந்திருந்தால் செம வெயிட்டான
வில்லனாக வலம் வந்துகொண்டிருப்பார், அதில் எந்த சந்தேகமும் இல்லை.ரகுவரன் நடிகை ரோஹினியை 1996ம் ஆண்டு திருமணம் செய்து 2004ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார், அவரின் பெயர் சாய் ரிஷிவரன்.
பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் களமிறங்க வர நடிகர் ரகுவரன் மகனின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் ரகுவரன் மகனா இவர் நன்றாக வளர்ந்துவிட்டாரே, அடுத்த ஹீரோ ரெடி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.