ம றை ந்த நடிகர் விவேக்கின் சகோதரி இன்று கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியின் பைனலுக்கு வந்திருக்கிறார்.

நடிகர் விவேக் தனது காமெடியோடு சமுக கருத்துக்களையும் மக்களுக்கு எடுத்து கூறியவர். குறிப்பாக மூட நம்பிக்கைகள், ஜாதி பாகுபாடு போன்றவற்றிற்கு எதிராக அவரது காமெடி காட்சிகளில் கருத்து சொல்லி இருப்பார்.

விவேக் கடந்த வருடம் 2021ல் ஏப்ரல் 17ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அவர் இறந்தாலும் அவரது கனவான மரங்கள் நடும் திட்டத்தை ரசிகர்கள் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

KPY சாம்பியன்ஸ் பைனலில் இன்று விவேக்கின் சகோதரி கலந்து கொண்டிருக்கிறார். இந்த ஷோவில் டைட்டில் சின்னக்கலைவாணர் விவேக் பெயரில் தான் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விவேக்கின் சகோதரி போட்டோ இதோ

Copyright cineulagam.com

 

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *