பாண்டியன் ஸ்டார் சித்ரா த ற் கொ லை வ ழ க் கில் ஏற்பட்ட தி டீ ர் தி ரு ப்பம் .. க டு ம் அ தி ர்ச் சி யில் ரசிகர்கள் ..!!
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி தனியார் விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இறப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரது கணவர் ஹேம்நாத் மற்றும் பெற்றோர் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதன் பிறகு சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக புகார் எழுந்த நிலையில் அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு 60 நாட்கள் சிறையில் இருந்த ஹேம்நாத் ஜாமீனில் வெளியானார்.
இந்நிலையில் சித்ரா தற்கொலை தொடர்பான வழக்கு தற்போது நடந்து கொண்டிருக்கிறது.இடையில் சில காலம் மௌனம் காத்து வந்த ஹேமந்த் தற்போது சித்ராவின் தற்கொலைக்கு காரணமானவர்களை கூற நான் தயார், எனக்கு முதலில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறினார்.
மேலும் பிரபல தொகுப்பாளர், அண்ணா நகரில் மெஸ்நடத்துபவர் தான் சித்ராவிற்கு தொல்லை கொடுத்து வந்ததாக ஹேமந்த் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தச் செய்தி தற்போது சித்ராவின் தற்கொலை வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.