பிரசாந்த் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பிரபல இந்தியத் திரைப்பட இயக்குனரும் நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவர். இவர் நடிகர் தியாகராஜன் – சாந்தி அவர்களின் மூத்த மகனாவார். இவருக்கு பிரீத்தி என்கின்ற ஒரு தங்கையும் உள்ளார்.
90களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் பிரஷாந்த், அவர் தனது தொடர் வெற்றி திரைப்படங்களால் ரஜினி, கமலுக்கு பிறகு அதிக வசூல் குவித்து வரும் கதாநாயகனாக திகழ்ந்து வந்தார்.இவர் நடிப்பில் வெளியான ஜீன்ஸ், ஜோடி, வின்னர் போன்ற திரைப்படங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அவர் சினிமாவில் நடிப்பதை தவிர்த்தார். தற்போது ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு அந்தகன் படம் மூலமாக ரீ என்ட்ரி கொடுக்கிறார்.
இந்நிலையில் நடிகர் பிரசாந்தின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று உள்ளது. அதில் பிரசாந்த் மற்றும அவரின் முன்னாள் மனைவி கிரஹலட்சுமி உடன் நடிகர் தனுஷ் உள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள் சில காரணங்களால் 2009-ல் விவாகரத்து செய்து கொண்டனர்.