அட கடவுளே பிக்பாஸ் கஞ்சா கருப்பின் தற்போதைய ப ரி தாப நிலை என்னவென்று தெரியுமா ?? இதோ நிலையமையை பார்த்து அ தி ர்ச் சி யில் ரசிகர்கள் ..!!
நகைச்சுவை நடிகர் கஞ்சா கறுப்பு ஒரு தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார்.அறிமுகப் படம் பிதாமகனில் கஞ்சா விற்பவராக நடித்ததைத் தொடர்ந்து ‘கஞ்சா கறுப்பு’ என்று அழைக்கப்படுகிறார். இவர் தனது மதுரைத் தமிழ் பேச்சுக்காகவும் வெள்ளந்தி நடிப்புக்காகவும் அறியப்படுகிறார். அதனைத் தொடர்ந்து ராம், சண்டக்கோழி, சிவகாசி, திருப்பதி போன்ற
படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தார்.அதன் பின்னர் சுப்ரமணியபுரம் படத்தில் நடித்து சிறந்த நடிகராகவும் பிரபலமடைந்தார்.கஞ்சா கருப்பின் தற்போதைய பரிதாப நிலை2010ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்ட கஞ்சா கருப்பு, 2014ஆம் ஆண்டு ‘வேல் முருகன் போர்வெல்ஸ்’ என்ற படத்தை தயாரித்தார்.
அந்த படம் வெற்றி பெறாததால் அவர் பெரும் நட்டத்தை சந்தித்தார். தற்போது கஞ்சா கருப்பு வாடகை வீட்டில் குடியிருக்கிறார்.இது குறித்து சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கஞ்சா கருப்பு, ‘படம் தயாரித்து மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று எனக்கு சில ஆலோசனை கூறினார்கள்.
நான் அதை கேட்கவில்லை. படம் பாதி முடிந்தபோது தான் எனக்கு தெரிந்தது. தயாரிப்பாளர் கஞ்சா கருப்புக்கு எதையும் தாங்கும் இதயம் உண்டு என்று, நான் தயாரித்த படத்தின் இயக்குநர் மற்றவர்களிடம் கூறியுள்ளார்.கடைசியில் நான் உழைத்து வாங்கிய காசில் வைத்திருந்த பாலா – அமீர் இல்லம்
என்ற எனது சொந்த வீட்டை விற்று விட்டு, இப்போது 20 ஆயிரம் ரூபாய்க்கு வாடகை வீட்டில் இருக்கிறேன். அதைப் பற்றி கவலைப்படவில்லை’ என தெரிவித்துள்ளார்.கஞ்சா கருப்புக்கு கடந்த சில ஆண்டுகளாக சரியான படங்கள் அமையவில்லை. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், பாதியிலேயே அதிலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.