என்னாது நான் பிரபாஸை காதலிக்கிறேனா ?? நடிகை க்ரித்தி சனோன் விளக்கம் !! அதி ர்ச் சி
யில் ரசிகர்கள் ..!!
தற்போது நடிகர் பிரபாஸ் இயக்குனர் ஓம் ராவுத்தின் ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. ஆதிபுருஷ் திரைப்படத்தின் ப்ரோமோனில் கலந்து கொண்ட க்ரித்தி சனோன், கரண் ஜோஹரிடம் பேசும்போது,
பிரபாஸுடன் டேட்டிங் செய்வதை சூசகமாக தெரிவித்தார். இது சமூக ஊடகங்களில் வைரலானது மற்றும் பல இணையதளங்கள் அவர்களின் திருமண தேதியை ஊகிக்கத் தொடங்கின. இந்நிலையில், நடிகை க்ரித்தி சனோன் இணையத்தில் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்ஸ்டாகிராம்
பக்கத்தில் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், இது பியாரோ அல்லது PRயோ அல்ல.எங்கள் பேட்டி ஓரு ரியாலிட்டி ஷோவில் கொஞ்சம் அதிகமாகவே சென்றுவிட்டது. அவரது வேடிக்கையான, கேலியான கேள்வி வதந்திகளுக்கு வழிவகுத்துவிட்டது. சில ஊடகங்கள் எனது திருமண
தேதியை அறிவிக்கும் முன் நான் சொல்லியே ஆகவேண்டும். அவை முற்றிலும் வதந்திகள், ஆதாரமற்றவை, போலியான செய்தி என வதந்திக்கு முற்றுப்புள்ளிவைத்துள்ளார்.ஹிந்தி நடிகை க்ரித்தி சனோன் நடிகர் பிரபாஸை காதலிப்பதாக வந்த செய்தி பற்றி அவரே விளக்கம் கொடுத்து இருக்கிறார் .