பிரபல நடிகர் யோகி பாபு பட விவகாரம் .. அட கடவுளே நி ர்வா ண மாக்கி அடித்து உதைத்தார்களா ?? இதோ தகவலை கேட்டு அதி ர்ச் சியான ரசிகர்கள் ..!!
யோகி பாபு நடிப்பில் உருவான திரைப்படம் ஷூ. இப்படத்தை கார்த்திக் என்பவர் தயாரித்துள்ளார். இப்படத்தின் ஓடிடி, டிஜிட்டல் மற்றும் வெளிமாநில உரிமையை தயாரிப்பாளர் கார்த்திக் என்பவரிடம் இருந்து ரூ. 1 கோடியே 10 லட்சத்திற்கு விநியோகஸ்தர் மதுராஜ் வாங்கியுள்ளார்.இதற்கு, முன் பணமாக ரூ. 20 லட்சத்தை மட்டுமே தயாரிப்பாளர் கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார் மதுராஜ். மீதமுள்ள பணத்தை படத்தின் வெளியீட்டுக்கு பின் இரண்டு தவணைகளாக தருகிறேன் என்று
மதுராஜ் கூறியுள்ளாரம்.ஆனால், ஷூ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியடைந்த காரணமாக படத்தை வாங்க யாரும் முன் வராத காரணத்தினால் தயாரிப்பாளருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார் மதுராஜ்.இதனால், மதுராஜின் அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்டு சென்றுள்ளார் தயாரிப்பாளர் கார்த்தி. அலுவலகத்தில் இருந்த கோபி கிருஷ்ணா மற்றும் பென்சர் இருவரையும் கடத்தி
சென்று நிர்வாணமாக்கி, சித்திரவதை செய்து மதுராஜிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.மதுராஜ் தனது மனைவியின் பிரசவத்திற்காக மதுரைக்கு வந்துள்ளதாக கூறியுள்ளார். இதனால் கடத்தி வந்த இருவரிடம் இருந்தும் ATM கார்டுகளை பறித்து அதிலிருந்து ரூ. 70 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர். இதன்பின் இருவரையும் வெட்டி, தாம்பரம் பகுதியில் கண்ணை கட்டி இறக்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதில் கோபி கிருஷ்ணா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். ஆனால், பென்சர் என்பவரை காணவில்லை என தெரியவந்துள்ளது. அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை.இதன்பின் மதுராஜ் போலீசில் புகார் அளித்துள்ளார். சம்பவத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துள்ளனர். இந்த விசாரணையில் தயாரிப்பாளர் கார்த்திக்கின் தூண்டுதலின் பெயரில் பிரபல ரவுடியின்
கூலி படை இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.கூலி படையாக செயல்பட்ட நபர்கள் தற்போது தலைமறைவு ஆகியுள்ளார்கள். அவர்களை போலீஸ் தற்போது தேடி வருகிறது. ஆனால், இப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்றும், இது தன் மேல் சுமத்தப்படும் பழி என்றும் ஷூ படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் கார்த்திக் தற்போது சிங்கப்பூரில் இருக்கிறாராம். இந்த விஷயங்களை எல்லாம் வேண்டுமென்றே யாரோ செய்கிறதாக கூறியுள்ளார். மேலும், தன் நற்பெயரை கெடுக்கும் படி யாரோ இப்படியான வேலைகளை செய்கிறார்கள். நான் எல்லோரிடத்திலும் நட்பாக தான் உள்ளேன், இவை முழுக்க முழுக்க பொய் என்று தயாரிப்பாளர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.