சரவணன்-மீனாட்சி என்ற தொடர் மூலம் தமிழ் சினிமா மக்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட ஒரு நாயகி நடிகை ரச்சிதா. முதல் பாகம் முடிவடைய இரண்டாவது பாகத்தில் யார் மீனாட்சியாக நடிப்பார் என அப்போது அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்டது.அப்படி ஒரு வேடத்தில் நடிக்க தொடங்கி இப்போது தொடர்ந்து நிறைய சீரியல்களில் நாயகியாக நடித்து வருகிறார்.
இப்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடிக்கிறார்.இந்த நேரத்தில் தான் ரச்சிதா தனது கணவர் தினேஷை வி வா க ரத்து செய்ய இருக்கிறார் என செய்தி வந்தது. ஆனால் தினேஷ் ஒரு பேட்டியில் தற்போது எங்களுக்குள் சில பி ரச் சனைகள், மற்றபடி வி வாக ரத்து முடிவு எடுக்கவில்லை என்றார்.
ஆனால் சமூக வலைதளங்களில் தினேஷ் வேலை இல்லாமல் இருந்ததே இவர்களின் பிரிவுக்கு காரணம் என்கின்றனர்.அப்படி பார்த்தால் இப்போது தினேஷ் சன் தொலைக்காட்சியில் புதிய தொடரில் நடிக்க கமிட்டாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.