நடிகர் பரத் நடிப்பில் வெளிவந்த “முயாண்டி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பூர்ணா. இவருடைய இயற்பெயர் ஷாம்னா காசிம். மேலும், துரோகி, ஆடு புலி, கொடிவீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் நடிகை பூர்ணா அவர்கள். தமிழ் திரையுலகில் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார்.
தன்னுடைய சிறப்பான நடிப்பால் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் இவர். அதோடு, “கொடி வீரன்” நின்ற படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது. மேலும், இவர் சமுத்திரகனி ஜோடியாக “காப்பான்” படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் பெரிதாக ஓடவில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.
தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான “விச்சித்ரன்” என்ற படத்தில் RK சுரேஷ் ஜோடியாக நடித்து இருந்தார். மேலும், சமீபத்தில் தான் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரை திருமணம் செய்ய போவதாக அறிவித்திருந்தார். அவருடன் இருக்கும் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் நடிகை பூர்ணா அவர்கள்.
இந்நிலையில், தற்போது பிரபல நடிகையான பூர்ணாவிற்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தன்னுடைய திருமண புகைப்படங்களை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், நடிகை பூர்ணாவின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும்.
இதோ வெளியான திருமண ஜோடியின் புகைப்படம் ..!!