இதோ சமூக இணையதளத்தில் வெளியான துணிவு திரை விமர்சனம் ..!!

வருட ஆரம்பம் ஆனதும் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் வகையில் ரிலீஸ் ஆகிவிட்டது அஜித்தின் துணிவு. எந்த நாளுக்காக அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்களோ அந்த நாளும் வந்துவிட்டது.படு மாஸாக, பிரம்மாண்மாக துணிவு ரிலீஸ் ஆகிவிட்டது. போனி கபூர், வினோத், அஜித் ஆகியோரின் கூட்டணியில் 3வது முறையாக வந்துள்ள இப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் விநியோகம் செய்துள்ளது.

சரி இனி படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.சென்னையில் ஒரு தனியார் வங்கியை ஆரம்பத்திலேயே ஒரு கும்பல் போலிஸ் உதவியுடன் கொள்ளையடிக்க வருகிறது. வந்த இடத்தில் அவர்களுக்கே தெரியாமல் அந்த பேங்கை அஜித் கொள்ளையடிக்க மஞ்சு வாரியருடன் ஒரு ப்ளான் போடுகிறார்.அஜித்துடன் போலிஸ் பேச்சு வார்த்தை நடத்த, ஒரு கட்டத்தில் அந்த வங்கியில் மிகப்பெரிய எக்ப்ளோசிவ் பாம் கிடைக்கிறது. அப்போது தான் தெரிகிறது, உள்ளே மூன்றாவதாக ஒரு டீம் இருக்கிறது என, பிறகு இந்த அயோக்கியர்களுக்குள் நடக்கும் ஆட்டம் தான் மீதிக்கதை.

அஜித் கொஞ்சம் நெகட்டிவ் ஷேட் என்றாலே செம குஷியாக ஆகிவிடுகிறார், தனது மேனரிசம், டயலாக் டெலிவெரி என பட்டாசு கிளப்புகிறார். அதிலும் பேங்க் உள்ளே சென்று அவர் செய்யும் சேட்டைகள் கலகலப்புக்கு பஞ்சமில்லை.படத்தில் ஒரு பேங்கில் நடக்கும் மோசடியை வெளியே கொண்டு வர நடக்கும் கதை தான், இதற்காக வினோத் எளிய மக்களுக்கும் புரியும் படி பேங்க்-ல் நடக்கும் விஷயங்களை குறிப்பாக பணத்தை முதலீடு செய்வதில் நடக்கும் குளறுபடிகளை தோல் உரித்து காட்டியுள்ளார்.

படத்தின் சின்ன சின்ன கதாபாத்திரம் கூட ஏதோ ஒரு வகையில் வசனங்கள் மூலம் ஈர்க்கின்றனர். அதிலும் மைபா என்ற பத்திரிகையாளர் கதாபாத்திரம் கலக்கல். படத்தின் மிகப்பெரிய பலம் சண்டைக்காட்சிகள். அஜித் அதகளம் செய்கிறார், சுப்ரீம் சுந்தர் அதற்கு பக்க பலமாக உள்ளார்.அதிலும் இடைவேளை முடிந்து வரும் ஒரு சண்டைக்காட்சி கலக்கல். ஜிப்ரானின் பின்னணி இசை சில இடங்களில் டயலாக்கை தாண்டி கொஞ்சம் இரைச்சலை தருகிறது.

படத்தின் முதற்பாதி முழுவதும் விறுவிறுப்பிற்கு பஞ்சமே இருக்காது, இரண்டாம் பாதி 10 நிமிடம் சோர்வை தந்தாலும், அடுத்தடுத்த காட்சிகள் பரபரப்பை தருகிறது.மேலும், கிளைமேக்ஸ் சண்டை காட்சி இன்னும் கொஞ்சம் நன்றாகவே எடுத்திருந்துருக்கலாம்.படத்தின் முதல்பாதி அஜித்தின் நடிப்பு, ஒவ்வொரு காட்சியிலும் செம்ம ஸ்கோர் செய்கிறார்.புரொடக்ஷன் வேல்யூ கம்மியாக இருந்த பீல்.மொத்தத்தில் லாஜிக் இல்லை என்றாலும் அஜித்தின் மேஜிக் படத்தை தூக்கி நிறுத்துகிறது.3/5

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *