இதோ இணையத்தில் வெளியான வாரிசு திரைவிமர்சனம் .. எப்படி நீங்களே பாருங்க .. அசந்து போயிடுவீங்க ..!! விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் வாரிசு. தில் ராஜு தயாரித்துள்ளார் இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, ராஷ்மிகா, யோகி பாபு என திரையுலக பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. இதுவே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது.
அதுமட்டுமின்றி வம்சியின் மாஸ் கமெர்ஷியல் இயக்கத்தில் விஜய் எப்படி இருப்பார் என்பதை திரையில் காணவும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தார்கள். இத்தைகைய எதிர்பார்ப்பை கொண்டிருந்த விஜய் ரசிகர்களை வாரிசு திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்க விமர்சனத்தில் பார்க்கலாம்.
முதல் பாதியில் சொதப்பியதை இரண்டாம் பாதியில் தூக்கி நிறுத்திவிட்டார்.மாஸ் ஆக்ஷன் காட்சிகளும், செண்டிமெண்ட் காட்சிகளும் சுவாரஸ்யத்தை அதிகரித்துவிட்டது. என்னதான் கமெர்ஷியலாக இருந்தாலும், ஒரு நியாயம் வேணாமா என்று கேட்கும் அளவிற்கு இரண்டாம் பாதியில் சண்டை காட்சிகள் அமைத்துள்ளது. தெலுங்கு திரையுலகில் கடந்த பல ஆண்டுகளாக அரைத்த அதே மாவை தான் தற்போது தமிழில் அரைத்துள்ளார் வம்சி. இருந்தாலும் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார். அதற்க்கு தனி பாராட்டு.
தமனின் ரஞ்சிதமே, தீ தளபதி சூப்பராக ஒர்கவுட் ஆகியுள்ளது. பின்னணி இசையில் பின்னிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு விஜய்க்கு மாஸாக ஒவ்வொரு பிஜிஎம்-மும் அமைந்திருந்தது. கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு பிரமாதம். பிரவீன் கே.எல் எடிட்டிங் படத்திற்கு பலம். திலிப் சுப்ராயன், பீட்டர் ஏயின் ஸ்டண்ட் விஜய்க்கு மட்டுமே மாஸை அதிகரிக்கிறது. ஜானி, ஷோபி, ராஜு சுந்தரம் மூவரின் நடன இயக்கும் அற்புதம்.
விஜய்
சரத்குமார், ஜெயசுதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம்
கதைக்களம்
இரண்டாம் பாதி
டைமிங் வசனங்கள்
மைனஸ் பாயிண்ட்
முதல் பாதி திரைக்கதை
ராஷ்மிகா மந்தனாமொத்தத்தில் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக அமைந்துள்ளது வாரிசு