வாரிசு மற்றும் துணிவு படங்கள் ப்ரீ புக்கிங் மூலம் எவ்வளவு வசூல் என்று தெரியுமா ?? அதிகம் கலெக்ஷன் செய்தது இந்த படமா ?? அதுவும் இத்தனை கோடியில் வசூலா ?? 8 வருடங்களுக்குப் பிறகு திரையில் மோதிக் கொள்ளும் தல தளபதியின் துணிவு மற்றும் வாரிசு போன்ற 2 படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக்குவதால் ரசிகர்கள் குதூகலத்தில் உள்ளனர். எனவே இந்தப் படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

அஜித்-விஜய் ரசிகர்கள் தான் தமிழ் சினிமாவில் முக்கியமாக பார்க்கப்படுபவர்கள். அவர்கள் அவர்களின் ஆசை நாயகனுக்காக செய்யும் விஷயங்களை பார்த்து தான் மற்ற பிரபலங்களின் ரசிகர்களும் செய்கிறார்கள்.இப்போது கூட அஜித்-விஜய் ரசிகர்கள் துணிவு மற்றும் வாரிசு படத்தை பெரிய அளவில் வரவேற்றுள்ளார்கள்.

இரு படங்களின் FDFS காட்சிகள் எல்லாம் சூப்பராக முடிந்துவிட்டது, ரசிகர்களும் படத்தை பார்த்த பெரிய மகிழ்ச்சியில் உள்ளனர்.இரண்டு படங்களுக்கும் செம மாஸான ப்ரீ புக்கிங் நடந்துள்ளது.அதன்படி ப்ரீ புக்கிங் விவரத்தை வைத்து பார்க்கும் போது அஜித்தின் துணிவு ரூ. 12 கோடியும், விஜய்யின் வாரிசு திரைப்படம் ரூ. 10 கோடியும் வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *