நடிகர் விக்ராந்தின் அம்மா இந்த பிரபல நடிகையா ?? இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!
நடிகர் விக்ராந்த் ‘கற்க கசடற’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவ்வாறு நடிப்பில் வெளியான ‘முத்துக்கு முத்தாக’ திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம். இதன் பின் கவன், தொண்டன், பக்ரீத் என பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.
நடிகர் விக்ராந்த் மானசா ஹேமச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு தற்பொழுது இரண்டு குழந்தைகள் உள்ளனர். நடிகர் விக்ராந்தை திருமணம் செய்து கொண்ட மானசா ஒரு பிரபல சீரியல் நடிகை. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘உதிரிப்பூக்கள்’ சீரியலில் நடித்துள்ளார்.
நடிகர் விக்ராந்தின் மனைவி சின்னத்திரை நடிகை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் நடிகர் விக்ராந்தின் தாய் ஒரு நடிகை என்பது நம்மில் பலருக்கு தெரியாது. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர். இவரது கதாபாத்திரம் இத்தொடரில் சில மாதங்களுக்கு முன்பு முடிக்கப்பட்டது..
இதை தொடர்ந்து தற்பொழுது அவர் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராதிகாவின் அம்மாவாக நடித்துக் கொண்டு வருகிறார். தற்பொழுது இவரைப் பற்றி அறிந்த ரசிகர்கள் ‘இவர்தான் நடிகர் விக்ராந்தின் அம்மாவா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அவரின் புகைப்படம்….