பிரபல பின்னணி பாடகர் ஸ்ரீநிவாஸ் மகளா இது ?? அடேங்கப்பா பார்க்க ஹீரோயின் போல இவ்வளவு அழகா இருக்காங்களே !! இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!!
பல மொழிகளில் பாடக்கூடிய பாடகர் ஸ்ரீநிவாஸ். இவர் தமிழ் திரையுலகின் பிரபலமான பின்னணி பாடகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். இவர் பாடிய ஹிட் பாடல்கள் எண்ணற்றவை. இதில் என் உயிரே என் உயிரே, சொட்ட சொட்ட, ஆப்பிள் பெண்ணே, காதல் மழையே, என்றென்றும் புன்னகை, நினைத்தபடி நெனச்சபடி, கண்ணோடு கண்கள், ஒரு பொய்யாவது சொல் பெண்ணே என பலஎண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
பாடகர் சீனிவாஸ் பாடிய பல பாடல்கள் இன்று வரை நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது என்றே கூறலாம். இவர் பல ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக விளங்கி வருகிறார். அந்த வகையில் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்தார். தற்பொழுது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சரிகமப’ நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார்.
பாடகர் ஸ்ரீனிவாசுக்கு சரண்யா ஸ்ரீனிவாஸ் என்று ஒரு மகள் உள்ளார். இவரும் தற்பொழுது பாடகியாக தான் பணி புரிந்து கொண்டு வருகிறார். இவர் தனது சிறு வயதிலேயே ‘தெனாலி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஆலங்கட்டி’ பாடலை பாடியுள்ளார். இதை தொடர்ந்து பல திரைப்படங்களில் எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார்.
தற்பொழுது பாடகர் சீனிவாஸ் தனது மகளுடன் இணைந்து எடுத்துக் கொண்ட அழகான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்…