வெளிநாட்டில் படித்து இந்தியாவில் மருத்துவம் பார்க்கும் செந்திலின் மகனை யாரும் பார்த்ததுண்டா ?? இதோ முதன் முறையாக மனைவியுடன் வெளியான புகைப்படம் ..!!ம் பிரபல காமடி நடிகர் செந்தில் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் மற்றும் அரசியல்வாதியும் ஆவார்.இவரும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் சேர்ந்து பல நகைச்சுவை படங்களில் நடித்து இன்று வரை மக்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றுள்ளனர்.
இவர் தந்தை தூற்றியக் காரணத்தால் தனது 12ஆம் வயதில் சொந்த ஊரை விட்டு ஓடி வந்தார். முதலில் ஒரு எண்ணெய் ஆட்டும் நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் ஒரு மதுபானக் கடையில் பணி புரிந்தார். பின்பு நாடகத்தில் சேர்ந்து தன்னுடைய நடிப்புத் திறமைகளை வளர்த்துக் கொண்டார்.
இதுவே அவர் திரையுலகத்தில் நுழைய உதவியாக இருந்தது. சிறு வேடங்களில் நடித்து வந்த இவருக்கு 1983 ஆம் ஆண்டு வெளியான மலையூர் மம்பட்டியான் படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. 1984ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு மணிகண்ட பிரபு,
ஹேமச்சந்திர பிரபு என இரண்டு மகன்கள் உள்ளனர்.இவர் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரும் கவுண்டமணியும் சேர்ந்து நடித்த பல நகைச்சுவை காட்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தவை.