நடிகை ரேவதியின் மகள் எப்படி இருக்கார் என்று தெரியுமா ?? பல வருடம் கழித்து வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!!
நடிகை ரேவதி தமிழ்த் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்களில் நடிகையாக அறியப்படுகிறார். மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்தி, ஆங்கிலத்தில் திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவர் ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார்.இவர் தந்தை கேளுண்ணி. ரேவதி, 1988 ல் சுரேஷ் மேனனைத் திருமணம் செய்தார். பின்னர், 2002 ல் இருவரும் மணமுறிவு பெற்று பிரிந்தனர்.
தமிழ் சினிமாவில் பிரபலமான மூத்த முன்னணி நடிகைகளில் ஒருவர் ரேவதி. இவர் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன், மகளீர் மட்டும், புன்னகை மன்னன் ஆகிய படங்கள் இன்றும் பலருடைய மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.நடிகை ரேவதி பிரபல நடிகர் சுரேஷ் சந்திரா மேனனை 1986ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
27 வருடங்கள் கழித்து 2013ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர்.இதன்பின் நடிகை ரேவதி கடந்த 2018ஆம் ஆண்டு தனக்கு 5 வயதில் மஹீ எனும் ஒரு பெண் குழந்தை இருப்பதாக கூறினார். இது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விளக்கம் அளித்த நடிகை ரேவதி, நான் டெஸ்ட் டியூப் வழியாக தான் கருவுற்றேன். பின் நான் பெண் குழந்தையை பெற்றெடுத்தேன். ஆனால், அனைவரும் இவளை நான் தத்து எடுத்து பிள்ளை என நான் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். நான் பெற்றெடுத்த குழந்தை தான் அவள் என்று கூறினார்.
ரேவதி தனது மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படங்கள்..