விஜய் ஆண்டனி இந்தியா, தமிழ்நாட்டின் ஓர் முன்னணி திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தற்போது திரைப்படத்தில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.மேலும் 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படத்தில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக்கொண்ட விட்டார் என்றே கூற வேண்டும்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான விஜய் ஆண்டனி. தற்போது “பிச்சைக்காரன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவரின் யதார்த்தமான நடிப்பால் “பிச்சைக்காரன்” திரைப்படம் நினைத்து பார்க்காத வெற்றியை தந்தால் தற்போது அதில் “பாகம் 2” உருவாக்கப்படுகிறது.மேலும் “பாகம் 1 ல்” அம்மா மீதுள்ள நன்றிக்கடன், அன்பு, காதல், தியாகம் என
பல கருப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தால் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்தது.இந்நிலையில் விஜய் அண்டனின் அடுத்த திரைப்படமான “பிச்சைக்காரன் 2 ”இறுதிக்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.மேலும் இந்த திரைப்படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரித்து வருகிறது.
இதன்படி, நடிகர் விஜய் அண்டனிக்கு படப்பிடிப்பின் போது பலத்த அடி ஏற்பட்டுள்ளதால் மருத் துவம னை யில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இவர் வி ரைவில் சி கிச் சையி லி ருந்து விடுபட்டு மீண்டும் படிப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதாக படப்பிடிப்பு குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வை ர லாகி வருகிறது. இதனை பார்த்த விஜய் அண்டனி ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.