பிரபல முன்னணி நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா மனோகர் என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா என்ற தொடரில் நடித்துப் புகழ் பெற்றார். அதனால் லொள்ளு சபா மனோகர் என்று அழைக்கப்படுகிறார். அந்த வகையில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி தற்போது தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக திகழ்பவர் லொள்ளு சபா மனோகர்.
தற்போது வரை விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது, அந்த வகையில் விஜய் டிவியில் மக்கள் மத்தியில் பிராலமான நிகழ்ச்சி தான் லொள்ளு சபா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் தான் மனோகர் இதனால் தான் இவருக்கு லொள்ளு சபா மனோகர் என்று பெயர் கிடைத்துள்ளது,இவருக்கு 2005 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் எப்எம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
இவர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு யோகி பாபு நடிப்பில் வெளிவந்த பேய்மாமா என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் இவர் படத்தில் தன்னுடைய நிலை குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.என் வாழ்க்கையில் சந்தானம் முதல் வடிவேலு வரை பல முன்னணி காமெடி நடிகர்களுடன் நடித்து இருக்கிறேன் என்னுடைய பழைய வீட்டை பார்த்து ஷாக் என்னுடைய விடாதீர்கள்.
இது மிகப் பழமையான வீடு. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே இங்கு தான். எனக்கு பக்கத்தில் உள்ள எல்லா வீடுகள் பெருசா இருந்தாலும் ஏன் உங்கள் வீட்டை இப்படி வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்பார்கள்.ஆனால் அந்த நேரத்தில் அந்த வீடு கை வெச்சாலே கீழே விழுற மாதிரி தான் இருந்தது. அதை வெச்சுகிட்டு நான் என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை.அதனால் எதற்கு ரெடி பண்ணனும் என்று விட்டுட்டேன்.
அதுமட்டுமல்லாமல் இந்த வீடு 25 வருடமாக கேஸில் இருக்கிறது வீடு கூறிய மனோகர் இருக்கிற வரைக்கும் இருக்கலாம் அதற்கு அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று நகைச்சுவையாக பேசினார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.