தம்பி விக்ரமன் நீதான்ய Title Winner !!: விக்ரமனுக்காக டுவிட் செய்த தொல்.திருமாவளவன் .. இதோ பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியான ப ரப ரப்பான வீடியோவை நீங்களே பாருங்க ..!!

பிக்பாஸ் போட்டியாளரான விக்ரமனை ஜெயிக்க வைக்க அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் வாக்கு கேட்டு டுவிட் செய்துள்ள தகவல் தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது இறுதி கட்டத்தை நோக்கிக் கொண்டிருக்கிறது.21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த போட்டி தற்போது 5 போட்டியாளர்களுடன் விறுவிறுப்போடு சென்றுக்கொண்டிருக்கிறது.

மேலும் இந்நிகழ்ச்சியில் கதிரவன் பணமூட்டையை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.பிக்பாஸ் நிகழ்ச்சியில் மி்க முக்கிய போட்டியாளராக விக்ரமன் விளையாடிவருகிறார்.இவர் தனது பயணத்தை டிவி சீரியலில்தான் ஆரம்பித்தார். தொடர்ந்து முன்னணி செய்தி ஊடகங்களில் பணிபுரிந்து, நெறியாளராகவும்

பல்வேறு அரசியல் தலைவர்களை நேர்காணலில் கேள்வி கேட்டு விளாசியிருப்பார்.பின்னர் அரசியல் கட்சியில் இணைந்து அரசியல் வழியில் செல்ல ஆரம்பித்தார். மேலும், பிக்பாஸ் வீட்டில் எந்த போட்டியாளர்கள் என்ன தவறு செய்தாலும் அதை தட்டிக்கேட்கும் முதல் ஆளாக இருப்பார் விக்ரமன்.இதனால் தான் அசீம் மற்றும் விக்ரமன் இடையில் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், பிக்பாஸ் போட்டியில் விக்ரமனை வெற்றிபெற வைக்க அவருக்கு வாக்களியுங்கள் என்று விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இது மக்கள் மத்தியில் வித்தியாசமான வித்தியாசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.நேரடி அரசியலில் இருக்கும் ஒருவர் இது போன்ற நிகழ்ச்சிக்காக வாக்கு கேட்பது அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *