மறைந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரபல நடிகைகள் .. அந்த பிரபல நடிகைகள் இவங்களா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

மறைந்த புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலன் இராமச்சந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர். எம். ஜி. சக்கரபாணிக்குத் தம்பியான இவர், தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார்.அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, இவரின் நண்பர் கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, அதன் பாெதுச்செயலாளாராக ஆக்கி, சட்டமன்ற தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார்.இவர் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதினை பெற்றவர்.

நடிகை ராதா மற்றும் அம்பிகா இருவருமே 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்கள். நடிகை அம்பிகா தனது 14 வயதில் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கினார். இதை தொடர்ந்து 1979இல் வெளியான ‘சக்காளத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இவர் தற்பொழுது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘நாயகி’ தொடரில் நடித்துக் கொண்டு வருகிறார்.

நடிகை அம்பிகாவை தொடர்ந்து திரை உலகில் கால் பதித்தவர் அவரது சகோதரி நடிகை ராதா. இவர் இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.இவரும் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சிவாஜி, சத்யராஜ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்பொழுது இருவரும்

எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் நடிகை அம்பிகா மட்டும் ஒரு சில சீரியல்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் சகோதரி நடிகைகளான அம்பிகா மற்றும் ராதா இருவரும் புரட்சித்தலைவர் நடிகர் எம் ஜி ஆர் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் தற்போது படுவைரலாகி வருகிறது.

இதோ இணையத்தில் வைரலாகும் அந்த புகைப்படம் ..

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *