WOW .. இவங்கதான் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியமின் மருமகளா ?? அட இவ்வளவு இது தெரியாம போச்சே .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!!
தமிழ் திரையுலகின் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்த காந்த குரல் மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களின் குரல் தான். ஆயிரம் நிலவே வா, மன்றம் இந்த தென்றலுக்கு, மண்ணில் இந்த காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ, நான் போகிறேன் மேலே மேலே, நான்தான் இனிமேல் வந்து நின்னா தர்பார் என அவர் பாடிய ஹிட் பாடல்கள் ஏராளம்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிகளிலும் பாடியவர். 6 தேசிய விருதுகளையும் வாங்கியுள்ளார். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர். உலகின் அதிக பாடல்கள் பாடிய பாடகர் என்று சாதனைக்கான கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் பாடகர் எஸ்.பி.பி.
1991 வெளிவந்த ‘சிகரம்’ படத்தில் தானே இசையமைத்து அதில் நடித்துள்ளார். மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளை வென்றுள்ளார். எஸ்.பி.பி அவர்கள் 2020ல் கொரோனா காரணமாக இயற்கை எய்தினார். இவருடைய மறைவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் மறைந்தாலும் இசை இருக்கும் வரையிலும் இசையை நேசிப்பவர்கள் இருக்கும் வரையிலும் அவர் குரலுக்கு என்றும் மறைவில்லை.
பாடகர் எஸ்பிபிக்கு சரண் என்னும் மகன் உள்ளார். அவர் ஒரு பின்னணி பாடகர். எஸ் பி சரண் 2012ல் அபர்ணா என்பது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் எஸ் பி சரண் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளன.
இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக.